டொனால்டு டிரம்ப் உடன் ஷி ஜின்பிங் கலந்துரையாடல்..! - Seithipunal
Seithipunal


​''அமைதியான மற்றும் பாதுகாப்பான உலகம் படைக்க தேவையான முயற்சிகளை சீன அதிபருடன் இணைந்து மேற்கொள்வேன்,'' என அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் கூறியுள்ளார்.

எதிர்வரும் 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.

அதன் பின், அவர் வெளியிட்ட அறிக்கையில்; ''இந்த ஆலோசனை அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு சிறந்ததாக அமைந்தது. நிறைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம் என்பது எனது எதிர்பார்ப்பு. இதற்கான பணிகள் உடனடியாக தொடங்கும். 

அத்துடன், ''சமமான வர்த்தகம், டிக் டாக் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். பாதுகாப்பான மற்றும் அமைதியான உலகத்தை படைக்க தேவையான அனைத்தையும் நானும், ஷி ஜின்பிங்கும் இணைந்து எடுப்போம்'' என்று அந்த அறிக்கையில் டிரம்ப் மேலும் கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Xi Jinping discussion with Donald Trump


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->