பரபரப்புக்கு மத்தியில் தொடங்கும் பாஜக செயற்குழு கூட்டம்.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தின் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையும், 2020 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலையும் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். அதன் பிறகு பா.ஜ.க-உடனான கூட்டணியில் இருந்து விலகிய அவர் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக 'இந்தியா' கூட்டணியை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். 

இருப்பினும் அவர் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், காணொலி காட்சி மூலம் நடந்த இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதைத் தொடர்ந்து, அவர் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க-வுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. 

இந்த நிலையில், பீகார் மாநில பாஜக செயற்குழு கூட்டம் நாளை தொடங்கி இரண்டு நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பீகார் மாநில பா.ஜ.க பொறுப்பாளர் வினோத் தாவ்டே நாளை பாட்னாவிற்கு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பீகார் அரசியலில் பரபரப்பான சூழல் நிழவி கொண்டிருக்கும் நிலையில் பாஜக செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp general meeting in bihar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->