அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி.. மனைவியுடன் பாஜக பிரமுகர் தலைமறைவு..!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி ஏம்பலம் நத்தமேடு கோவில் தெருவைச் சோ்ந்தவர் பாஜக பிரமுகர் காத்தவராயன் அரசு வேலையில் சேருவதற்காக தனக்கு தெரிந்த பாஜகவின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்து வந்துள்ளார். இந்த நிலையில் காதவராயனுக்கு சென்னையைச் சோ்ந்த பாஜக பிரமுகரான அறிவழகன் என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது. இப்போது காத்தவராயன் அரசு வேலைக்காக கடந்த 2020ம் ஆண்டு ரூ.15.90 லட்சத்தை அறிவழகனிடம் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட அறிவழகன் வேலை வாங்கி தராமல் பல மாதங்களாக இழுத்தடித்து வந்த நிலையில் திடீரென அறிவழகன் தனது மனைவியுடன் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து தனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பாஜக பிரமுகர் தன்னிடம் இருந்து ரூ.15.90 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக புதுச்சேரி தன்வந்திரி காவல் நிலையத்தில் காத்தவராயன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அறிவழகன் மற்றும் அவருடைய மனைவியை வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP leader absconds 16 lakhs defrauded case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->