ராமர் கோவில் கும்பாபிஷேக விழா - அழைப்பிதழ் வழங்கும் பணியில் தீவிரம் காட்டும் அண்ணாமலை.!
bjp leader annamalai provide ramar temple kumbabishegam invitation
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இந்த மாதம் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல அரசியல் பிரமுகர்களும், விவிஐபிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில், இந்த கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பிதழ் வழங்கி வருகிறார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில், ”பாரதத்தின் ஆன்மீக கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கவிருக்கும் அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி 22 அன்று நடைபெறவிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தற்பொது, கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, வரும் 22ம் தேதி அன்று நமது பிரதமர் கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது. பகவான் ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளிப் பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், அன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவர் இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவுரையின்படி, கும்பாபிஷேகப் பெருவிழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணி நடந்து வருகிறது. சென்னையில் இன்று, எனது இல்லத்தின் அருகில் வசிப்பவர்கள் இல்லங்களுக்கு நேரில் சென்று, ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கினோம். ஒரு ஒப்பற்ற பெருவிழாவாவில், அனைவரின் வருகையையும் பங்களிப்பையும் வேண்டுகின்றோம்” என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
bjp leader annamalai provide ramar temple kumbabishegam invitation