தண்டவாளத்தில் விழுந்த பெண் எம்.எல்.ஏ - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


நேற்று பாஜக எம்எல்ஏ சரிதா பரத்வாஜ் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைக்கும்போது, தண்டவாளத்தில் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆக்ராவிலிருந்து வாரணாசிக்கு வந்த பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதனை தொடங்கி வைப்பதற்காக பாஜக எம்எல்ஏ சரிதா பரத்வாஜ் நடைமேடையில் நின்று கொண்டிருந்த போது, கூட்டம் அதிகமாக இருந்ததால், ஓரத்தில் நின்று கொண்டிருந்த சரிதா, பின்னால் இருந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டு தண்டவாளத்தில் தவறி விழுந்தார். 

லோகோமோஷனுக்கு தயாராக இருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முன்பு அவர் விழுந்ததால், ரயில் ஹாரன் அடித்தது. உடனே நடைமேடையில் நின்றிருந்த தலைவர்கள் ரயில் ஓட்டுனரை முன்னோக்கி நகர்த்துவதை நிறுத்துமாறு சைகை காட்டினார்கள். 

உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள் பெண் எம்.எல்.ஏவை பத்திரமாக மீட்டனர். அதன் பின்னர் அவர் கொடியசைத்து ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp woman mla saritha bharatwaj fell down in railway track


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->