ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கண்டெடுப்பு..கொலையா?தற்கொலையா? போலீஸ் விசாரணை!
Bodies of four members of a family found Murder? Suicide? Police investigation!
அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கண்டெடுப்பட்டுள்ளது.முதற்கட்ட விசாரணையின்படி, தொழிலதிபரான சேத்தன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு பின்னர் மற்றொரு குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா லேஅவுட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளார். இதையடுத்து நடந்த போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் இறந்தவர்கள் 45 வயது சேத்தன், 43வயது அவரது மனைவி ரூபாலி , 62 வயது தாய் பிரியம்வதா,மற்றும் 15 வயதுமகன் குஷால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து முதற்கட்ட விசாரணையின்படி, தொழிலதிபரான சேத்தன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு பின்னர் மற்றொரு குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் அவர்கள் நேற்று இரவு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உறவினர்களுக்கு வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அதனை இன்று அதிகாலை பார்த்த உறவினர்கள் உடனடியாக போலீசார் தகவல் அளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக கடன் காரணமாக சேத்தன் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்புள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்தநிலையில் அவர்களின் மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் தெரிவித்துள்ளார்.
English Summary
Bodies of four members of a family found Murder? Suicide? Police investigation!