நடுவானில் பறந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - அதிர்ச்சியில் பயணிகள்.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே பொது இடங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை இரண்டு மணிக்கு நியூயார்க் நகருக்கு ஏர்-இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது.

இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுகுறித்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் டெல்லிக்கு திருப்பப்பட்டு அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது.

உடனே, அங்கு தயார் நிலையில் இருந்த வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் ஏறி சோதனை நடத்தியதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதனால், வெடிகுண்டு இருப்பதாக வந்த செய்தி வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இருப்பினும் அதிகாரிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வெடிகுண்டு புரளியால் அந்த விமானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், பயணிகள் தவிப்புக்குள்ளானார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bomb threat to air india flight


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->