வெறும் நாடகம்! பாஜக,காங்கிரஸ் இரண்டும் இடஒதிக்கீடுக்கு எதிரான கட்சி - மாயாவதி! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான கட்சிகள் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மழைகால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  பேசுகையில் இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய பாஜக எம்பி அனுராக் தாக்கூர், தன்னுடைய ஜாதி என்னவென்று தெரியாதவர்கள் ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பேசுகின்றனர் என்று மக்களவையில் பேசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

அதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி நீங்கள் எவ்வளவு வேண்டுமானால் என்னை அவமானப்படுத்துங்கள். ஆனால் இதே அவையில் நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பிற்கான சட்டத்தை இயற்றுவேன் என்று பதில் அளித்தார். மக்களவையில்  ஆளுங்கட்சி எம்பிகளும் எதிர்கட்சியும் எம்.பிகளும் சிறிது நேரம் அமலில் ஈடுபட்டதால் மக்களவையில் பெரும் பதற்றம் நிலவியது.

இந்தநிலையில் இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சமூக வலைதலை பக்கமான எக்ஸ்  தளத்தில் தெரிவித்துள்ளதாவது, மக்களவையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மோதிக்கொண்டது வெறும் நாடகம்.

இரண்டு கட்சிகளுக்குமே ஓபிசிகளின் இடஒதிக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்த வரலாறு கொண்டவைகள். ஓபிசி களின் இட ஒதுக்கீட்டுக்கு வெளிப்படையாகவும் திரை மறைவிலும் அந்த கட்சிகள் தீவிரமாக எதிர்த்து வருகின்றன. இந்த விவகாரத்தில் அவர்களை நம்ப முடியாது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Both BJP and Congress are anti reservation parties Mayawati


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->