ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட மாணவர் திடீரென உயிரிழந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தில் சிரோலி என்ற கிராமத்தைச் சேர்ந்த பதினான்கு வயது சிறுவன் மோஹித் சவுத்ரி, தனது பள்ளியில் வரும் 7-ந்தேதி நடைபெற உள்ள விளையாட்டு போட்டிகளுக்காக தயாராகி வந்துள்ளார். 

இந்த நிலையில், சிறுவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டப்பந்தய பயிற்சியில் ஈடுபட்ட போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் மோஹித் சவுத்ரியை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால், சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதேபோல், அலிகார் மாவட்டத்தில் கடந்த மாதம் மம்தா என்ற 20 வயது இளம்பெண் ஓட்டப்பந்தய பயிற்சியில் ஈடுபட்டபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy died in uttar pradesh for heart attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->