அப்படிப் போடு ..! தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணம் உயர்த்திய நிலையில், BSNL அறிவித்துள்ள புதிய சலுகை..!! - Seithipunal
Seithipunal


ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மாத ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், அரசு நிறுவனமான BSNL புதிய சலுகையை அறிமுகப் படுத்தியுள்ளது. 

புதிதாக ஜியோ நெட்ஒர்க் அறிமுகமான காலத்தில் ஒரு மாத இலவச ரீசார்ஜ் ஆஃபருடன் சிம் கார்டுகளை வழங்கியது. மேலும் மாதம் தோறும் ஒரு நாளைக்கு 1 ஜிபி நெட் உபயோகிக்கும் வசதியை கொண்டு வந்தது. ஆனால் இப்போது திடீரென உங்களுக்கு வரும் இன்கமிங் கால்களுக்கும் கூட நீங்கள் தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் புதிய கட்டண முறையை அறிவித்துள்ளது. 

தனியார் நெட்ஒர்க் நிறுவனங்களின் இந்த அதிரடி கட்டண உயர்வு, நடுத்தர வர்க்க மக்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் தான் அரசு நிறுவனமான BSNL 395 நாள் வேலிடிட்டி கொண்ட புதிய திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. 

இதன்படி 395 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டமானது, நாள் ஒன்றுக்கு 2 ஜி பி அதிவேக 4 ஜி டேட்டாவுடன், தினமும் 100 இலவச எஸ் எம் எஸ், அனைத்து நெட்ஒர்க்குகளிலும் இருந்து வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்களை ரூ. 2399 என்ற விலையில் அறிமுகப் படுத்தவுள்ளது. 

மேலும் இந்த திட்டத்தில் நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதியும் உள்ளது. இத்துடன் இந்த திட்டத்தின் மூலம் Zing Music, BSNL Tunes, Hardy Games, Challenger Arena Games மற்றும் Gameon Astrotell உள்ளிட்ட சேவைகளையும் BSNL இலவசமாக வழங்கவுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSNL Launches New Recharge Plans With More Benefits


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->