#Budget2024 || வட்டியில்லா கடன்.. வருமான வரி உச்சவரம்பு.. வெளியான அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதால் 2024 நிதி ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று மக்களவையில் நடைபெற்று வருகிறது. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

பெண்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்த அவர் தற்போது வருமான வரி உச்சவரம்பு மற்றும் வடியுள்ள கடன் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

அதில் குறிப்பாக மாநிலங்களுக்கு வண்டியில்லா கடனாக ஒன்று புள்ளி மூன்று லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ள நிர்மலா சீதாராமன் நாட்டில் நேரடி வருவாய் அதிகரித்துள்ளதாகவும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை எட்டு கோடிக்கு அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து 7 லட்சம் ஆக உயர்த்தியதை சாட்டியுள்ள நிர்மலா சீதாராமன் வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளார். மேலும் ரூ.11.75 லட்சம் கோடி கடன் வாங்குவதற்கு திட்டமாதம் ஜிஎஸ்டி சராசரி வசூல் 1.6 லட்சம் கோடியாக இருப்பதை குறிப்பிட்டுள்ளார். தனது இடைக்கால பட்ஜெட் உரையை 58 நிமிடங்களில் வாசித்து முடித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Budget 2024 no interest loan and income tax margin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->