காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் புகுந்த காளை மாடு! பாஜகவின் சதி என அசோக் கெலாட் குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரச்சார கூட்டத்தில் காளை மாடு புகுந்ததால் பரபரப்பு உண்டானது.

 

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடை உள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத்தில் உள்ள மெரிசான எனும் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அந்த கூட்டத்தில் காளை மாடு ஒன்று புகுந்து இடையூறு ஏற்படுத்தியது. திடீரென மாடு புகுந்ததால் கூட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. மேலும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தொண்டர்கள் சற்று பீதி அடைந்தனர். அப்பொழுது மேடையில் பேசிக் கொண்டிருந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்துவதற்காக பாஜக செய்த சதி என சாடினார்.  

நான் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்கு போதெல்லாம் இடையூறும் ஏற்படுத்தும் வகையில் இது போன்ற யுத்திகளை பாஜகவினர் கையாள்வதை நான் நீண்ட வருடங்களாக பார்த்து வருகிறேன் என பேசினார். தேர்தல் முடிகின்ற வரை பாஜக இது போன்ற எந்தவிதமான யுத்திகளையும் கையாளும் என குற்றச்சாட்டினார். மக்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அமைதி காத்தால் மாடு தானாக சென்று விடும் என அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் அந்த மாட்டினை கூட்டத்திலிருந்து அப்புறப்படுத்தினார். காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் காளை மாடு புகுந்த நிகழ்வு பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bull entered the campaign meeting of the Congress Party in Gujarat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->