கர்நாடக சட்டசபைத் தேர்தல் : வாடகை முறையில் பேருந்துகளை பயன்படுத்த அரசு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் பணிக்காக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கா்நாடக மாநிலத்தில் அரசு பேருந்துகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.57.50 ஆகவும், ஒரு நாள் வாடகை குறைந்தபட்சம் ரூ.11 ஆயிரத்து 500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாடகைத் தொகையில் குறைந்தபட்ச தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும். 

பேருந்துகளுக்கான இந்த வாடகை தொகையை தேர்தல் செலவு நிதியில் இருந்து மட்டுமே ஒதுக்க வேண்டும். அதேபோல், பெங்களூர் நகருக்குள் பயன்படுத்தப்படும் தனியார் பேருந்துகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.43.50 ஆகவும், ஒரு நாளைக்கு ரூ.8,700 ஆகவும் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பேருந்துகளை வாடகைக்கு முடிவு செய்து விட்டு, அதை பயன்படுத்தாமல் இருந்தால் அதற்கு வாடகையாக ரூ.4,350 செலுத்த வேண்டும். பெங்களூரு நகருக்கு வெளியே பயன்படுத்தப்படும் தனியார் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.42.50 ஆகவும், ஒரு நாள் வாடகையாக ரூ.8,200 ஆக முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், சிறியரக சரக்கு வாகனங்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.29 ஆகவும், ஒரு நாள் வாடகையாக ரூ.2,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றது தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bus use to rent for karnataga assembly election purposes


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->