வங்காளதேசத்தில் வெடித்த கலவவரம்! வங்காளதேசம் இடையிலான விமான சேவை ரத்து! ஏர் இந்தியா அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இந்தியா - வங்காளதேசம் இடையிலான விமான சேவையை ரத்து செய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

வங்காளதேசத்தில் தொடர்ந்து வன்முறை போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. பங்களாதேசத்தின் பல்வேறு நகரங்களில் கலவரம் மான சூழல் உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவிலிருந்து டாக்காவுக்கும் டாக்காவில் இருந்து இந்தியாவுக்கும் ஏர் இந்தியா விமான சேவை நடைபெற்று வருகிறது. அந்த விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக  ஏர் இந்தியா  அறிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, வங்காளதேசத்தில் நிலவும் கலவரம் காரணமாக டாக்கா மற்றும் இந்தியா இடையில் திட்டமிடப்பட்ட எங்களது விமான சேவைகள் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

வங்களதேசத்தில் நிலவும் கலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. போராட்டத்தின் உச்சமாக ஹசீனாவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். இதனை தொடர்ந்து தனது சகோதரி ஷாக் ரேகனாவுடன் சேர்ந்து ராணுவ விமான மூலம் வெளிநாட்டுக்கு தப்பி சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்காள தேசத்தில்  நடைபெற்று வரும் போராட்டங்கள் காரணமாக இந்தியா வங்காளதேசம் இடையிலான விமான சேவையை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி விமான பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cancellation of flights between India and Bangladesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->