தமிழகத்திற்கு நீர் திறந்து விட முடியாது - கர்நாடகா திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா அதிகாரிகள் பங்கேற்றனர். 

இந்த ஆணைய கூட்டம் ஒரே மாதத்தில் இரண்டு முறை நடக்கிறது. குறிப்பாக இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் நதிநீர் பங்கீடு தொடர்பாக தொடரப்பட்ட அவசர மனு மீது முடிவு எடுக்கும் வகையில் விவாதிக்கப்பட்டது. 

கர்நாடகா அரசுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகள் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தினர். 

இந்நிலையில் இந்த முறையும் வழக்கம் போல் கர்நாடகா அரசு தமிழகத்திற்கு நீர் திறந்து விட முடியாது என மறுப்பு தெரிவித்துவிட்டது. 

தற்போது அணையில் போதிய நீர் இல்லாததால் தண்ணீர் திறந்து விட முடியாது. கர்நாடக அணைகளில் 47% மட்டுமே தண்ணீர் இருக்கிறது. 

இதனை குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. இதனால் தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cannot open water to Tamil Nadu 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->