லட்டு விவகாரம் - பவன் கல்யாண் மீது போலீசில் புகார்.! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டுவில் பயன்படுத்திய நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்து இருந்ததாகவும், இந்த லட்டுகளை அயோத்திக்கும் அனுப்பி வைத்து இருப்பதாகவும் ஆந்திர துணை முதலமைச்சரும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் குற்றம் சாட்டியுள்ளார். 

இதையடுத்து பவன் கல்யாண் மீது பிரஜா சாந்தி கட்சி தலைவர் கே.ஏ.பால் ஐதராபாத்தில் உள்ள பஞ்சா குட்டாகாவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பவன் கல்யாண் பேச்சு பைத்தியக்காரத்தனமாக உள்ளது. 

அயோத்தி ராமர் கோவிலுக்கு விலங்குகள் கொழுப்பு கலந்த ஒரு லட்சம் லட்டுகள் தயாரித்து அனுப்பியதாக குற்றம் சாட்டியுள்ளார். அயோத்தி ராமர் கோவில் நிகழ்ச்சி ஜனவரி மாதம் நடந்தது. ஆனால் லட்டுவில் கலப்படம் செய்த விஷயத்தை சந்திரபாபு நாயுடு வெளியிட்டது ஜூலை மாதத்தில். 

இந்த சூழலில் ஜனவரியில் திருப்பதி லட்டுவில் கலப்படம் நடந்தது இவருக்கு எப்படி தெரியும். ஆகவே சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் பவன் கல்யாண் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் மனு அனுப்பி உள்ளேன்'' என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file on andira deputy cm pawan kalyan


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->