கன்னியாகுமரி அரசு பள்ளியில் அதிர்ச்சி!...மதுபோதையில் வந்த ஆசிரியர் அதிரடியாக பணி இடைநீக்கம் !
Shock in kanyakumari government School drunken teacher suspended
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அடுத்த செறுகோல் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வரும் நிலையில், 10 வகுப்பு வரையிலான இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதே பள்ளியில் தமிழ் ஆசிரியராக நாகர்கோவிலைச் சேர்ந்த ஜார்ஜ் ஹென்றி என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
ஜார்ஜ் ஹென்றி மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதாகவும், மாணவர்களுக்கு முறையாக பாடம் எடுப்பதில்லை எனவும் புகார்கள் எழுந்தது. மேலும் இது தொடர்பாக பள்ளி மாணவர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து, வேறு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து, வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட நிலையில், தமிழ் ஆசிரியர் ஜார்ஜ் ஹென்றி பள்ளிக்கு வந்ததை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெற்றோர்களின் முற்றுகை போராட்டம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பாலதண்டாயுதபாணி, தமிழ் ஆசிரியர் ஜார்ஜ் ஹென்றியை பணி இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
Shock in kanyakumari government School drunken teacher suspended