கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் விழுங்கி விடும்!...நன்மதிப்பை சீர்குலைக்க காங்கிரஸ் விருப்பம்! - பிரதமர் மோடி கடும் தாக்கு! - Seithipunal
Seithipunal


டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பாஜக தொண்டர்களிடையே பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுண்ணி கட்சி என்றும், அது தன்னுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளையே விழுங்கி விடும் என்று தெரிவித்த அவர், பொது மக்கள் தங்களுடைய சொந்த பாரம்பரியங்களை வெறுக்கும் விதமாக, தேசிய அமைப்புகளை சந்தேகிக்கும் வகையில் நாட்டை உருவாக்க காங்கிரஸ்  விரும்புவதாக சாடினார்.

மேலும் நாட்டு மக்கள் அனைவரும் பெருமை அடையும் ஒவ்வொரு நிகழ்விலும்,  நன்மதிப்பை சீர்குலைக்க விரும்புவதாக கூறிய அவர், நாட்டின் உள்ள முக்கிய அமைப்பையும் களங்கப்படுத்த காங்கிரஸ் விரும்புவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, அரியானா மற்றும் காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தபோது, காங்கிரஸ் தகவல் தொடர்பு பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில்  தேர்தல் முடிவுகள் பற்றிய உண்மையான தகவலை தேர்தல் ஆணைய வலைதளத்தில் அல்லது செயலியில் அடுத்தடுத்து வெளியிடும்படி அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

இதனால், தேர்தல் நடைமுறையை வலுவிழக்க செய்யும் வகையில் அவர் குறிப்பிட்டு உள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்த விவகாரத்தில் நம்பத்தக்க சான்றுகள் இல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கூறுவதாக தேர்தல் ஆணையம் பதில் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress will swallow the alliance parties congress wants to destroy the reputation pm modi hits hard


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->