தபால் வாக்குசீட்டை சமூக வலைதளத்தில் வெளியிட்ட போலீசார் - மஹாராஷ்டிராவில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் தபால் வாக்குகளை செலுத்தினர். 

அந்த வகையில், போலீஸ்காரர் ஒருவர் அஸ்தி தொகுதிக்கான தபால் ஓட்டை மலபார்ஹில் வாக்குப்பதிவு மையத்தில் செலுத்தினார். அப்போது அவர் வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு சீட்டை படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார்.

இது தொடர்பாக மலபார்ஹில் தேர்தல் அதிகாரியிடம் புகார் வந்தது. இதையடுத்து தேர்தல் விதிகளை மீறி வாக்கு சீட்டை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த போலீஸ்காரர் மீது காவ்தேவி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்தப்புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் போலீஸ் தனது தபால் வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file on police officer for share post vote photo in social media


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->