நடுவானில் விமானத்தில் புகைபிடித்த இளைஞர் - ஊழியர்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் தலைநகர் டெல்லிக்கு பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில், விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது விமானத்தின் கழிவறையில் இருந்து புகை வந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் கழிவறையை திறந்து பார்த்தபோது பயணி ஒருவர் சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முகமது அலி என்பது தெரியவந்தது. 

இதையடுத்து ஊழியர்கள் சம்பவம் தொடர்பாக விமான கேப்டனுக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து விமான சட்டம் 125-வது பிரிவின் கீழ் முகமது அலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file to passanger for smoke in flight


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->