காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்! எப்போது தெரியுமா?
Cauvery Management Commission board meeting
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ் கே ஹல்தர் தலைமையில், காவேரி மேலாண்மை ஆணையத்தின் 30 வது கூட்டம் நடைபெறவுள்ளது.
புதுதில்லியில் வருகின்ற மே 21 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில் காவிரி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோடை வெயில் வாடி வரும் நிலையின் தமிழகத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விட பரிந்துரைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் 30 ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு மே மாதம் 2.5 டி.எம்.சி. நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Cauvery Management Commission board meeting