நீட் குளறுபடி! 13 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் 13 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புக்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மே ஐந்தாம் தேதி நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மே நான்காம் தேதியே ஐந்தாம் தேதி நடக்க இருந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இளநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியான போது, எந்த ஆண்டும் இல்லாத அளவில்  67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான  720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். அரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய ஏழு பேர் முதல் மதிப்பெண் பெற்ற சம்பவம் நீட் தேர்வில் குளறுபடிகள் நடைபெற்று இருப்பதை உறுதி செய்தது.

அதனைத் தொடர்ந்து நீட் குளறுபடி நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களில் தீவிர விசாரணை நடத்தி பல்வேறு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

குஜராத்,ராஜஸ்தான்,மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் மற்றும் வினாத்தாள் கசிவு நடைபெற்று இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். அது தொடர்பாக பலரை கைது செய்தனர்.

இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியாக கருதப்படும் 13 பேர் மீது தற்போது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI files charge sheet against 13 people in NEET exam question paper leak case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->