நீட் முறைகேடு விவகாரம்! ஜார்க்கண்ட் பள்ளியிலிருந்து நீட் வினாத்தாள் திருட்டு! சிபிஐ விசாரணை! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் பள்ளியிலிருந்து நீட் வினாத்தாள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பாக நீட் வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற நீட் தேர்வில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 67 பேர் 720க்கு 720 முழு மதிப்பெண் பெற்றனர்.  

அதுமட்டுமில்லாமல்  அரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதி 7 பேர் முழு மதிப்பெண் பெற்றது பெரும் சர்ச்சையை கிளப்பியது. நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நீட் முறைகேடு தொடர்பான அனைத்து வழக்கும் சிபிஐக்கு மாற்றப்பட்டது. நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிரமான விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு சம்பவம் தொடர்பாக சிபிஐ இதுவரை 13 பேரை கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில், நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது, ஜார்கண்ட் மாநிலம்  ஹசாரிபக்கில் உள்ள ஓயாசிஸ் பள்ளியின் முதல்வர் துணை முதல்வர் மற்றும் மைய கண்காணிப்பாளர் ஆகியோரின் உடந்தையுடன் நீட் தேர்வு வினாத்தாள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிநவீன கருவிகளை பயன்படுத்தி ட்ரங்கை திறந்து வினாத்தாளை திருடி உள்ளனர். திருடப்பட்ட வினாத்தாள் அதே நாளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பணம் செலுத்திய பிறகு சில மாணவர்களுக்கு பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI finds theft of NEET question paper from Jharkhand school


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->