பிரபல பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷியை கைது செய்த சிபிஐ! நாட்டுக்கே துரோகம் செய்த கொடூரம் அம்பளம்! - Seithipunal
Seithipunal


 

நாட்டின் இரகசிய தகவல் தொடர்புகள்/தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல் மற்றும் இந்திய ஆயுதப்படைகளின் எதிர்கால கொள்முதல் பற்றிய விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை சட்டவிரோதமாக பகிர்ந்த குற்றத்திற்காக, பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷி மற்றும் அவரது கூட்டாளியான முன்னாள் கடற்படைத் தளபதி ஆஷிஷ் பதக் ஆகியோரை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைது செய்துள்ளது.

கடந்த டிசம்பர் 2022 ஆம் ஆண்டு, அன்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிராக, டிஆர்டிஓ பாதுகாப்புத் திட்டங்களின் நுணுக்க விவரங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம், இந்திய ஆயுதப்படைகளின் எதிர்கால கொள்முதல் பற்றிய முக்கியமான விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை சட்டவிரோதமாக சேகரித்ததாக பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷி மற்றும், முன்னாள் கடற்படைத் தளபதி ஆஷிஷ் பதக் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது

தொடர்ந்து இவர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் சிபிஐ சோதனை செய்தது. அப்போது, மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், மொபைல் போன்கள், ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் பென் டிரைவ் உள்ளிட்ட 48 மின்னணு சாதனங்களை சிபிஐ பறிமுதல் செய்தது. 

மேலும், இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பான பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள்/மற்றவர்களின் கிளவுட் அடிப்படையிலான கணக்குகள்/மின்னஞ்சல்கள்/சமூக ஊடக கணக்குகளில் சேமிக்கப்பட்ட தரவுகளும் சிபிஐயின் டிஜிட்டல் தடயவியல் நிபுணர்களால் மீட்கப்பட்டுள்ளன. 

விவேக் ரகுவன்ஷி மற்றும் ஆஷிஷ் இடமிருந்து இதுவரை மீட்கப்பட்ட சாதனங்களை ஆய்வு செய்ததில், இந்தியாவின் பாதுகாப்புக் கொள்முதல் தொடர்பான ரகசியத் தகவல்களைச் சேகரித்து வருவதும், பல வெளிநாட்டு நிறுவனங்கள்/ முகவர்கள்/ நபர்களுடன் தொடர்பில் இருந்ததும், அவர் ஒப்பந்தங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

இரகசிய தகவல்களைப் பகிர்வதற்காக பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் கணிசமான தொகையைப் பெற்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் சிபிஐ கைது செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI arrested journalist Vivek Raghuvanshi Ashish Pathak 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->