'ருபே' டெபிட் கார்டுகள் பரிமாற்றத்தை ஊக்குவிக்க  ரூ.2 ஆயிரம் கோடி - மத்திய அரசு ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


நேற்று நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், உள்நாட்டின் தயாரிப்பான 'ருபே' டெபிட் கார்டுகள், 'பீம்' யு.பி.ஐ. உள்ளிட்ட செயலி மூலம் பண பரிமாற்றம் செய்வதை ஊக்குவிப்பதற்கு ரூ.2 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

அதன் படி, இந்த ஆண்டில், பாயிண்ட் ஆப் சேல் கருவிகள் மற்றும் ஆன்லைன் வணிகத்தில் 'ருபே' கார்டு மற்றும் 'பீம்' உள்ளிட்ட செயலியை பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்வதை ஊக்குவிப்பதற்காக வங்கிகளுக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். 

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்த ருபே மற்றும் பீம்யுபிஐ போன்றவை, மின்னணு பண பரிமாற்ற முறையில் இந்தியா அடைந்த முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, இயற்கை விவசாய விளைபொருட்கள், விதைகள் மற்றும் ஏற்றுமதி போன்றவற்றை ஊக்குவிப்பதற்காக மூன்று புதிய கூட்டுறவு சங்கங்களை அமைப்பதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. 

இது குறித்து மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்ததாவது, "தேசிய ஏற்றுமதி சங்கம், தேசிய ஆர்கானிக் பொருட்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் தேசிய அளவிலான பன்மாநில விதை கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட பெயர்களில் இந்த மூன்று சங்கங்கள் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார். 

மேலும், கொல்கத்தாவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய குடிநீர் மற்றும் சுகாதார நிலையத்திற்கு ஜனசங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியின் பெயரை சூட்டுவதற்கு மத்திய அமைச்சரவை முன்தேதியிட்டு ஒப்புதல் அளித்தது. அதனை கடந்த மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central cabinate approvel to two thousand crores for rupay card promote


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->