6 மில்லியன் டன் சக்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி.!
Central Government allows 6 million tonnen sugar of export
6 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
உலக அளவில் சர்க்கரை அதிகளவு உற்பத்தி செய்யும் நாடான இந்தியா, நடப்பாண்டில் இரண்டாவது பெரிய சர்க்கரை ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது.
இருப்பினும் உள்நாட்டில் சர்க்கரையின் தேவையை கருத்தில் கொண்டும், சர்க்கரை விலையை நிலைநிறுத்தவும் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் அக்டோபர் 31-ந்தேதி வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதையடுத்து மீண்டும் சர்க்கரை ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு 2023-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வரை ஓராண்டுக்கு நீட்டித்தது.
இந்த நிலையில், சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒதுக்கீடு அடிப்படையில் அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வருகிற 2023-ம் ஆண்டு மே மாதம் வரை 6 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மூன்று ஆண்டு சராசரி சர்க்கரை உற்பத்தியில் 18.23% சர்க்கரையை ஒதுக்கீடு அடிப்படையில் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளதாக மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
Central Government allows 6 million tonnen sugar of export