10 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்தது மத்திய அரசு! - Seithipunal
Seithipunal


உபா  சட்டத்தின்கீழ் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்) 10 பேரை பயங்கரவாதிகளாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்று, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

பயங்கரவாதிகளின் விவரம் பின்வருமாறு :

* பாகிஸ்தானை சேர்ந்த ஹபிபுல்லா மாலிக் என்ற சஜித் தத் - இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கையாண்டவன்.

* காஷ்மீரின் பாரமுல்லாவை சேர்ந்த பசிட் அகமது ரேஷி (பாகிஸ்தான்) - காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்டு கொடுத்தவன்.

* காஷ்மீரின் சோபோரை சேர்ந்த இம்தியாஸ் அகமது கான்டூ என்ற சஜத் (பாகிஸ்தான்) - பயங்கரவாதிகளுக்கு நிதியுதவிக்கு ஏற்பாடு செய்தவ.

* பூஞ்ச் பகுதியை சேர்ந்த ஜாபர் இக்பால் என்ற சலிம் (பாகிஸ்தான்) - காஷ்மீரில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் செய்தவன்.

* புல்வாமாவை சேர்ந்த ஷேக் ஜமீல் உர் ரகுமான் என்ற ஷேக் சஹாப் (பாகிஸ்தான்) - பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டவன்.

* ஸ்ரீநகரை சேர்ந்த பிலால் அகமது பெய்க் என்ற பாபர் - பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டவன்.

* பூஞ்ச் பகுதியை சேர்நத் ரபிக் நய் என்ற சுல்தான் - பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டவன்.

* தோடா பகுதியை சேர்ந்த இர்ஷாத் அகமது என்ற இத்ரீஸ் - பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டவன்.

* குப்வாரா பகுதியை சேர்ந்த பஷிர் அகமது பீர் என்ற இம்தியாஸ் - பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டவன்.

* பாரமுல்லா பகுதியை சேர்ந்த சவுகத் அகமது ஷேக் என்ற சவுகத் மோச்சி (பாகிஸ்தான்) - பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டவன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central government has declared 10 people as terrorists


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->