கொம்பன் பட இயக்குனரின் படத்தில் ஒப்பந்தமாகும் அருள்நிதி.!
arulnithi joined komban movie director new movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி . 'வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் இவர்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'டிமான்டி காலனி' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அருள் நிதி பம்பர் படத்தின் இயக்குனர் எம். செல்வகுமார் இயக்கத்திலும், தேன் படத்தின் இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இவர் தற்போது மற்றொரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதாவது, கொம்பன் படத்தினை இயக்கிய முத்தையா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.
இவர்களது கூட்டணியில் உருவாகும் இந்தப்படத்தில் அருள்நிதி பாக்ஸராக நடிக்க உள்ளார். இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
arulnithi joined komban movie director new movie