சிட்டிக்கு கோவம் வந்துடுச்சு! வேலையைக்காட்டிய ரியான்! சல்லி சல்லியாய் உடைந்த கோவா கேங்! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் வீட்டில் நடந்த ஒரு கலர்ஃபுல் அணி, "கோவா கேங்" என அழைக்கப்பட்ட ஜெஃப்ரி, செளந்தர்யா, ஜாக்குலின் மற்றும் ரயான் ஆகியோர், தற்போது ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபட்டு, கேங் சிதறி விட்டது.

கடந்த சில வாரங்களாக "கோவா கேங்" வீட்டின் விதிகளை மீறி, மற்ற போட்டியாளர்களின் கேம்களை கெடுத்து, சிறப்பான டாஸ்க்குகளை ஸ்பாயில் செய்ததற்காக விஜய் சேதுபதி அவர்களை எச்சரித்தார். ஏஞ்சல் vs டெவில் டாஸ்கில் இந்த குழுவின் செயல்பாடுகள் ரசிகர்களிடமும் கோபத்தை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு, குழுவில் முதலில் ஜெஃப்ரி தனியே பிரிந்து ஆட தொடங்கினார்.

இப்போது கிச்சன் விவகாரத்தில் ரயான் - ஜாக்குலின் இடையே சண்டை ஏற்பட்டது, மேலும் நாமினேஷன் கட்டத்தில் செளந்தர்யா ஜாக்குலினை நாமினேட் செய்ததாலும், இருவரிடையே மோதல் தீவிரமானது. இந்நிலையில், கோவா கேங்கின் சோலியை ஒரு வாரத்திலேயே முடித்துவிட்டனர் என்பது ரசிகர்களின் கருத்தாக வெளிவந்துள்ளது.

பிரெண்ட்ஷிப் மற்றும் விளையாட்டிற்கான போட்டி இடையே சமநிலையை நிரூபிக்க முடியாததாலே, கோவா கேங் பிக்பாஸ் வீட்டில் சரியாக நீடிக்க முடியவில்லை. இதனால், முன்னணி போட்டியாளர்களாக இருந்தவர்களும் தனித்தனி ஆகி விட்டனர்.

ரசிகர்கள் கூறுவதுபோல், "கோவா கேங்" எனும் கலாட்டா குழு தற்போது அதிக விளையாட்டுகளும், சண்டைகளும் தரவைத்துள்ளது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biggboss season 8


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->