ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர் - தமிழக அரசுக்கு கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி அளித்துள்ளார்.

நேற்று இரவு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவரின் வீடு அருகேயே படுகொலை  செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர், அதுவும் ஒரு தலித் தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மீதான கேள்வியை எழுப்ப்பியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் தெரிவிக்கையில், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. தமிழக முதலமைச்சர் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையை படுகொலை செய்யப்பட்டதற்கு வன்மையான கண்டனங்கள்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபி சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு கொடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கனை பேணுவதில் திமுக அரசுக்கு அக்கறையில்லை.

பகுஜன் சாமஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமூக சேவையில் ஈடுபட்டு பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளார். தேசியக் கட்சியின் மாநிலத் தலைவருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ்நாட்டில் நிலவி வருகிறது.

சென்னையில் தற்போது படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை என்பது அரசாங்கத்தின் தோல்வியை காட்டுகிறது.

தமிழக அரசு சட்டம் ஒழுங்கை துளிகூட மதிக்கவில்லை. சட்டம்-ஒழுங்கை கையில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Minister Condolence to Bahujan Samaj Party Armstrong


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->