இன்னும் 7 நாட்களில்.. இந்தியா முழுவதும் "CAA" அமல்.. பரபரப்பை கிளப்பிய மத்திய அமைச்சர்.!!
Central minister said CAA act amended within 7days in India
நாடாளுமன்ற பொது தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் தொடர் வரும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
நாளை மறுநாள் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து ஆலோசனை நடத்த வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அடுத்த 7 நாட்களுக்குள் இந்தியா முழுவதும் சி ஏ ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வரும் என மத்திய அமைச்சர் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசி உள்ள மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் "நாடு முழுவதும் அடுத்த 7 நாட்களில் CAA அமலுக்கு கொண்டுவரப்படும். குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாவதை யாராலும் தடுக்க முடியாது. குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மக்களை தவறாக வழிநடத்துகிறார்" என தெரிவித்துள்ளார்.
English Summary
Central minister said CAA act amended within 7days in India