2014 ம் ஆண்டுக்கு முன்பு நீட் தேர்வில் முறைகேடு - மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி!
Central minister say about neet scam issue and Congress protest
டெல்லியில் இன்று செய்தி அவர்களை சந்தித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவிக்கையில், "தேர்வு முறைகேடு விவகாரங்களில் மாணவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை;
NDA கூட்டணி அரசு மீது முறைகேடு தொடர்பான பழிகளை சுமத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது;
2014-ம் ஆண்டுக்கு முன்பே இதுபோன்ற முறைகேடு பிரச்னைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஆனால் தற்போது அதை நியாயப்படுத்த முடியாது;
பிரதீப் சிங் கரோலாவின் தலைமைக்கு பிறகு, தேசிய தேர்வு முகமையில் (NTA) பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன;
ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
தேர்வு முறைகேடு விவகாரங்களை விவாதிக்க காங்கிரஸ் கட்சிக்கு விருப்பமில்லை; முறைகேடுகள் தொடர்பான குழப்பங்களை மட்டும் விளைவிக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது;
அரசியல் ஆதாயம் வேண்டி சுமூகமாக உள்ள அரசு அமைப்புகளில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது" என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
English Summary
Central minister say about neet scam issue and Congress protest