தொடர் செயின் பறிப்பு.. அந்திரமாநிலத்தை சேர்ந்த சரித்திரபதிவேடு குற்றவாளிகள் கைது!
Chain snatching Historical Record Criminals Arrested In Andhra Pradesh
கடந்தாண்டு 2024 நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதத்தில் புதுச்சேரியில் 4 தொடர் செயின் பறிப்பு குற்றம் தொடர்பாக அந்திரமாநிலத்தை சேர்ந்த திருடன் 40க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் என்றும் தெரியவந்தது.
கடந்தாண்டு 2024 நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதத்தில் புதுச்சேரியில் 4 தொடர் செயின் பறிப்பு குற்றம் நடந்தது, இது சம்பந்தமாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு கலைவாணன் ஐபிஎஸ் உத்தரவின் சிறப்பு அதிரடிப்படை காவல் கண்காணிப்பாளர் திரு ஜிந்தா கோதண்டராமன் பி பி எஸ் மேற்பார்வையில் சிறப்பு அதிரடி படை ஆய்வாளர்கள் திரு கணேஷ் மற்றும் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு சந்தோஷ் திரு பியரே ஜான் அவர்களைக் கொண்ட போலீசார் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தது,
இந்த சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சையத் பாஷா மற்றும் சந்தோஷ் என்பது தெரிய வந்தது, உடனடியாக ஆந்திரா மாநிலம் கடப்பா சென்று புலன் விசாரித்ததில் இவர்கள் ஆந்திரா கடப்பா காவல் நிலையத்தில் சரித்திர குற்றம் பதிவேடு கொண்ட குற்றவாளிகள் என்றும் இதில் சையத் பாஷாவிற்கு ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா தமிழ்நாடு மாநிலத்தின் சுமார் 40க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் என்றும் தெரியவந்தது.
மேலும் சந்தோஷ் என்ற குற்றவாளி மீது கொலை முயற்சி வழக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் அடிதடி வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது இவர்களை பற்றி மேலும் விசாரித்து சந்தோஷ் என்ற நபரை கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான் மேலும் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சையத் பாஷா அவனைப் பற்றிய துப்பு ஏதும் கிடைக்கப்பெறாததால் அவனைப் பற்றி தீவிரமாக விசாரித்ததில் அவன் டெல்லி பூனே ஹைதராபாத் மற்றும் கோவா போன்ற இடங்களில் மாறி மாறி தங்குவதாக தகவல் கிடைக்கப்பெற்றது.
இந்த தகவலின் படி கடந்த வாரம் கோவாவில் பதுங்கி இருந்த சையத் பாஷாவை சிறப்பு அதிரடிப்படை கோவா சென்று கைது செய்து விசாரித்ததில் இவன் மீது 40க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு சம்பவங்கள் நிலுவையில் உள்ளதாகவும் மேலும் அவன் புதுவைக்கு சுற்றுலா வந்து இங்கு மோட்டார் சைக்கிள் திருடி அந்த மோட்டார் சைக்கிளை கொண்டு தொடர் செயின் பரிப்பில் ஈடுபட்டது ஒப்புக்கொண்டான் மேற்கண்ட குற்றவாளியை தகுந்த புலன்விசாரணை செய்து கைது செய்த சிறப்பு அதிரடி படை போலீசாரை திரு. கலைவாணன் ஐபிஎஸ் அவர்கள் மற்றும் சிறப்பு அதிரடி படை காவல் கண்காணிப்பாளர் திரு ஜிந்தா கோதண்டராமன் பி பி எஸ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
English Summary
Chain snatching Historical Record Criminals Arrested In Andhra Pradesh