சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சந்திரசேகர ராவ்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது வீட்டின் கழிவறையில் திடீரென வழுக்கி விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் எனவும் முழுமையாக குணமடைய 6 முதல் 8 வாரங்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி சந்திரசேகர ராவ்-க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்திரசேகர ராவை சந்தித்து நலம் விசாரித்தனர். 

இதே போல் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் சந்திரசேகர ராவிடம் நலம் விசாரித்தனர். தற்போது அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் சந்திரசேகரா ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrasekhar Rao returned home from hospital


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->