நிலவின் 3D புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரோ! அசத்திய நவ்கேம் ஸ்டீரியோ' தொழில்நுட்பம்!
Chandrayaan3 Mission Anaglyph is a simple visualization
சந்திராயன் மிஷன் 3 : தற்போது நிலவின் மேற்பரப்பில் இருக்கும் லேண்டரின் முப்பரிமாண படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ரோவர் இந்தப் படத்தை எடுத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த புகைப்படம் குறித்து இஸ்ரோ விடுத்துள்ள செய்திக்குறிப்பில், " நிலவின் தரைப்பரப்பை காட்டும் வகையிலும், நிலவின் பரப்பில் லேண்டர் கலன் நின்றுகொண்டிருப்பதைக் காட்டும் வகையிலும் இந்த முப்பரிமான படம் உள்ளது.
எலக்ட்ரோ ஆப்டிக் முறையில் மேம்படுத்தப்பட்ட 'நவ்கேம் ஸ்டீரியோ' தொழில்நுட்ப வகையைச் சேர்ந்த இந்தப் படத்தில் இடது, வலது என முப்பரிமாணங்களையும் ரோவர் படம் பிடித்துள்ளது.
இந்த முப்பரிமாண படத்தில் சிவப்பு நிறம் இடதையும், நீலம் மற்றும் பச்சை நிறம் வலதையும் குறிக்கிறது.
இந்த இரு நிறங்களுக்கு இடைப்பட்ட வேறுபாடு முப்பரிமாணத்தைக் குறிக்கிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும், இந்தப் படத்தை முப்பரிமாண கண்ணாடி அணிந்து காணலாம் என்றும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
English Summary
Chandrayaan3 Mission Anaglyph is a simple visualization