கே.எஸ்.ஆர்.டி.சி பெயர் விவகாரம் - கர்நாடகாவுக்கு எதிரான கேரளா மனு தள்ளுபடி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம், கடந்த 1973 நவம்பர் 1ம் தேதி முதல் 'கே.எஸ்.ஆர்.டி.சி' என்ற சுருக்கத்தை பயன்படுத்தி வருகிறது. இதற்கு, கடந்த 2013ம் ஆண்டு அதிகாரபூர்வமாக இந்திய வர்த்தக முத்திரை பதிவு ஒப்புதலும் அளித்திருந்தது. 

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரள மாநிலத்தின் கேரளா சாலை போக்குவரத்து கழகம், சென்னையில் உள்ள ஐ.பி.ஏ.பி என்ற அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தில் முறையிட்டது.இது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் இருந்து வந்த நிலையில், மத்திய அரசு ஐ.பி.ஏ.பியை கலைத்தது.

அதன் பின், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, இம்மனு மீதான விசாரணை, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நடைபெற்றது. அப்போது, கர்நாடகா மாநில சாலை போக்குவரத்து கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வி.எஸ்.கிரிதர், முத்திரை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.1973லிருந்து பயன்படுத்தி வருவதற்கான ஆவணங்களும் உள்ளது. 

ஆகவே, கேரளா சாலை போக்குவரத்து கழகம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிட்டார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, கேரள சாலை போக்குவரத்து கழகம் தாக்கல் செய்திருந்த குறியீட்டு உரிமை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court dismissed kerala pettition against ksrtc name issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->