முறைகேடான சம்பவங்களை அதிகாரிகளிடம் உடனே தெரிவிக்க வேண்டும் - விமான நிறுவனம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கடந்த வருடம் நவம்பர் மாதம் 26-ம் தேதி அமெரிக்கா நாட்டில் உள்ள நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில், பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் மதுபோதையில், சிறுநீர் கழித்த விவகாரம் தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையறிந்த, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் விளக்கம் அளிக்க வேண்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவன பணியாளர்களுக்கு தலைமை செயல் அதிகாரி கேம்பெல் வில்சன் உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, "சிறுநீர் கழித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பயணியின் வெறுப்பு முற்றிலும் புரிந்துகொள்ளக் கூடியது தான். அவரது துயரத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். இந்த சம்பவம் சற்று சிக்கலானதாக உள்ளது. இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் மிக தெளிவாக இருக்கிறது. 

விமானத்தில் முறையற்ற நடத்தையை கொண்டு ஒரு சம்பவம் நடந்து, அது சம்பந்தப்பட்ட தரப்பினர் இடையே தீர்க்கப்பட்டதாக இருந்தாலும் பணியாளர்கள் அதனை ஆரம்பத்திலேயே அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief excutive order to flight staff for male passengers urinated on woman issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->