குரங்கு அம்மை நோயால் குழந்தைகளுக்கு மரணம் ஏற்பட வாய்ப்பு.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!
Children are likely to die from monkeypox Doctors warn
குரங்கு அம்மை நோயால் குழந்தைகளுக்கு மரணம் ஏற்படலாம் என எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகள் தொடங்கி ஐரோப்பிய நாடுகள் வரை கதிகலங்க வைத்து வருகிற குரங்கு அம்மை, நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு வந்த ஒரு மலையாளிக்கு இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற உயர் நிலை ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் , 5 மாவட்டங்களில் சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அறிவித்தார்.
அதன்படி, திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம் திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ள நபருடன் ஒரே விமானத்தில் வந்துள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், குரங்கு அம்மை நோயால் குழந்தைகளுக்கு மரணம் ஏற்படலாம் என எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Children are likely to die from monkeypox Doctors warn