இந்திய பெருங்கடலில் இருந்து வெளியேறியது சீன உளவு கப்பல் 'யுவான் வாங் 5' - Seithipunal
Seithipunal


இந்திய கடற்படை தொடர் மற்றும் நீண்டதூர ஏவுகணைகள் ஏவுவதற்கான பயிற்சியில் ஈடுபட போவதை கண்காணிப்பதற்காக கடந்த டிசம்பர் 5ஆம் தேதி சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான 'யுவான் வாங் 5' இந்திய பெருங்கடலை வந்தடைந்தது.

மேலும் பல்வேறு தொலைநோக்கு மற்றும் அதிநவீன கண்காணிப்பு சாதனங்களுடன் பொருத்தப்பட்ட யுவான் வாங் 5 கப்பல் ஒரு வாரத்திற்கும் மேலாக இந்திய பெருங்கடலில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டது.

இந்நிலையில் சீன உளவு கப்பல் இந்திய பெருங்கடலில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்திய பெருங்கடலில் நட்பு நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், சீன ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு கப்பல்களின் வருகை அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதேபோன்று கடந்த ஆகஸ்ட் மாதம் சீன உளவு கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகம் வந்தடைந்தது இந்தியா மற்றும் இலங்கை உறவுகளுக்கிடையே விரிசலை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China spy and research ship leaves Indian Ocean


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->