ஜோ பைடன் போலவே பிரதமர் மோடிக்கு ஞாபக மறதி - ராகுல்காந்தி விமர்சனம்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 20 அன்று நடைபெறுகிறது. இதில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இன்று, அமராவதியில் பிரசாரம் செய்த காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

அதில், அதானியின் தாராவி திட்டம் தொடர்பாக, மகாராஷ்டிர அரசை கவிழ்த்த பாஜக நடவடிக்கையை குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, மகாராஷ்டிராவின் ஏழை மக்களின் நிலங்களை அதானிக்கு வழங்கும் முயற்சியின் காரணமாகவே பாஜக அரசு மக்களை விலக்கி ஆட்சி பிடித்தது” என்று தெரிவித்தார்.

மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிலையை ஒப்பிட்டு, பிரதமர் மோடிக்கு ஞாபக மறதி ஏற்பட வாய்ப்புள்ளது என்று சாடினார். மோடி சமீப கால பேச்சுக்களில் கூறியவற்றையே மீண்டும் கூறி வருகிறார், இது அவரது ஞாபக மறதியை குறிக்கிறது,” என்றார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul gandhi say about PM Modi memory power


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->