நெருங்கும் சட்டசபைத் தேர்தல் - மஹாராஷ்டிராவில் 5 கோடி பணம் பறிமுதல்.!
five crores money seized in maharastra
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 20ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் நடைபெற குறைவான நாட்களே உள்ளதால், தேர்தல் விதிகள் அமலில் உள்ளன. அமலாக்கத்துறையினர் கணக்கில் காட்டப்படாத பணம், மதுபானம் மற்றும் பிற தூண்டுதல்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நிலையான கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படைகள் மற்றும் பிற கண்காணிப்பு பிரிவுகள் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் ரூரல் சட்டசபை தொகுதியில் தேர்தல் அதிகாரிகள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தில் இருந்து ரூ.5.55 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்ட ரூ.10 லட்சத்தை தாண்டியதால், இந்த விவகாரம் மேலும் விசாரணைக்காக வருமான வரித்துறைக்கு அனுப்பட்டுள்ளது.
English Summary
five crores money seized in maharastra