இருசக்கர வாகனத்தில் சென்று வாக்களித்த முதல்வர்.! - Seithipunal
Seithipunal


தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. 

அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் காலையில் இருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 

இந்நிலையில் புதுச்சேரி, திலாசுப்பேட்டை பகுதியில் உள்ள அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது வாக்கினை பதிவு செய்தார். 

அவர் வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு காரில் செல்வதற்கு பதிலாக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று வாக்குப்பதிவு செய்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Rangaswamy cast vote on two wheeler


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->