செல்பி எடுக்கும்போது நேர்ந்த கொடூரம் - பாறை இடுக்கில் சிக்கிய கல்லூரி மாணவி..!
college student step down rock in karnataga
கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டம் குப்பி பகுதியை சேர்ந்த ஹம்ஷா என்ற பத்தொன்பது வயது பெண், தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கல்லூரி விடுமுறை என்பதால் தனது தோழிகளுடன் மந்தாரகிரி மலைப்பகுதியை சுற்றி பார்க்க சென்றார்.
அங்கு அதே பகுதியில் இருந்த மிர்தாளகெரே ஏரியை பார்க்க சென்றார். அந்த ஏரியில் இருந்து வெளியேறிய நீர், பாறை இடுக்குகள் வழியாக நீர்வீழ்ச்சி போல் ஆர்ப்பரித்து விழுவதை பார்க்க ஏராளமான சுற்றுலா வருவோர் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இதை பார்த்து ரசித்த ஹம்ஷா, நீர்வீழ்ச்சி நடுவே உள்ள பாறையில் நின்று தனது தோழியுடன் 'செல்பி' எடுக்க முயன்றார்.
அப்போது, திடீரென்று ஹம்ஷா கால் தவறி கீழே விழுந்து பாறை இடுக்கில் சிக்கி கொண்டு உயிருக்காக போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த தோழி, போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தார். அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ஹம்ஷாவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
விடிய, விடிய இந்த மீட்பு பணிகள் நடந்ததையடுத்து நேற்று காலை 6 மணி அளவில் போலீசார் ஹம்ஷாவை பத்திரமாக மீட்டனர். தற்போது அவர் துமகூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
English Summary
college student step down rock in karnataga