கர்நாடகாவில் சோகம் - தாய் திட்டிய ஆத்திரத்தில் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவை சேந்தவர் தம்மையா. பெங்களூரு - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சுங்கச்சாவடி நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வரும் இவர் உரிமத்துடன் துப்பாக்கியும் வைத்துள்ளார். 

இவருடைய மகன் விஷ்ணு உத்தப்பா. பொறியியல் படித்து வரும் இவருக்கும், அவரது தாயாருக்கும் இடையே கடந்த 3ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, விஷ்ணுவை, அவரது தாயார் கடுமையாக திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது, தந்தையின் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே நெஞ்சில் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சம்பவம் குறித்து பெங்களூரு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், விஷ்ணுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் விஷ்ணு சுட்டுக்கொண்ட துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student sucide in karnataga banglore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->