ஐயப்பன் கோவிலில் 2 நாட்களுக்கு குறைவான பக்தர்களுக்கு மட்டும் அனுமதி - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி நடக்கிறது. இதனைமுன்னிட்டு 25-ந் தேதி மாலை 6.30 மணிக்கு அய்யப்பசாமிக்கு தங்க அங்கி அணிவித்து அலங்கார தீபாராதனை நடைபெறும்.

இதற்காக ஆன்லைன் முன்பதிவு மூலம் தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி தரிசன முன்பதிவு மூலம் தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் படி நேற்று முன்தினம் ஒரே நாளில் 96 ஆயிரத்து 853 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

இந்த நிலையில், 24-ந் தேதி வரையிலான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், 25, 26-ந் தேதிகளுக்கான முன்பதிவு நடந்து வருகிறது. 

இந்த இரண்டு நாட்களும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக 25-ந் தேதி 50 ஆயிரம் பேருக்கும், 26-ந் தேதி மண்டல பூஜை நாளில் 60 ஆயிரம் பேருக்கும் ஆன்லைன் முன்பதிவு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், உடனடி தரிசன பதிவு மூலம் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming 25 and 26 fewer devotees allowed in sabarimalai temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->