முதல்வரின் போஸ்டரை கிழித்த நாயை கைது செய்க.. காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தற்பொழுது ஆளும் ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் "ஜெகன் அண்ணா எங்கள் எதிர்காலம்" என்ற வாசகத்துடன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியில் உருவப்படம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் விஜயவாடா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரை நாய் ஒன்று கடித்து கிழித்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள விஜயவாடா பகுதியைச் சேர்ந்த ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் நாயே கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை அவமதித்த அந்த நாயையும் அதன் உரிமையாளரையும் கைது செய்ய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாயை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Complaint at police station to arrest dog tore CM poster


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->