சட்டபைத் தேர்தல் - டெல்லியில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்..!
congrass election candidate list published for delhi assembly election
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியுடன் முடிவடைகிறது. இதனால், சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு ஜனவரியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைப்பதற்காக கடுமையாக உழைத்து வரும் ஆம் ஆத்மி கட்சி சட்டசபைத் தேர்தலில் தனது சொந்த பலத்தில் போட்டியிடும் என்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்திருந்தது. இதனை ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி 21 வேட்பாளர்களை கொண்ட முதற்கட்ட பட்டியலை நேற்று வெளியிட்டது. அந்த பட்டியலில் முன்னாள் எம்.பி.யான சந்தீப் தீட்சித் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
congrass election candidate list published for delhi assembly election