முதல் பதக்கத்தைத் தட்டித் தூக்கிய மானு பாகெருக்கு காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து.!
congrass leaders wishes to manu bakher
ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர் பங்கேற்று 221.7 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். இதைதொடர்ந்து, வெண்கலப் பதக்கம் வென்ற மானு பாகெருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மானு பாகெருக்கு காங்கிரஸ் எம்.பி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பாராட்டியுள்ளனர். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:- "பாரீஸ் ஒலிம்ப்பிக்கில் இந்தியா முதல் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது.
வெண்கல பதக்கத்தை கைப்பற்றி, ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கம் வென்று அசத்திய முதல் இந்தியரான மானு பாகெருக்கு வாழ்த்துகள். நமது மகள் சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளார். இந்தியாவிற்கு மென்மேலும் பதக்கங்கள் குவியவுள்ளன" என்றுத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்ததாவது, " இந்தியா தனது ஒலிம்பிக் ஓட்டத்தை தகுதியான பதக்கத்துடன் தொடங்கியுள்ளது.பாரீஸ் 2024-ல் பெண்களுக்கான 10மீ பிஸ்டல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு வாழ்த்துகள்.
உங்கள் சாதனை உங்களின் சிறப்பான திறமை மற்றும் விடாமுயற்சிக்கு சான்றாகும். நாங்கள் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். இந்த முக்கியமான சந்தர்ப்பம் எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்களை சிறந்து விளங்க பாடுபட ஊக்குவிக்கட்டும்" என்றார்.
English Summary
congrass leaders wishes to manu bakher