சாகும் போது கூட தேசிய கொடியை தான் வைத்திருந்தார் - கிருஷ்ணகுமார் பாண்டேவுக்கு ராகுல்காந்தி இரங்கல்.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதில், 62ஆவது நாள் நடைப்பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், மகாராஷ்டிர மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் சேவா தள பொதுச்செயலாளருமான கிருஷ்ண குமார் பாண்டேவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. 

இதனால், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவரை அங்கிருந்து மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் நடைப்பயணத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், பாதயாத்திரையின் போது உயிர்நீத்த கிருஷ்ண குமார் பாண்டேவிற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளதாவது, "கடைசி நிமிடம் வரை பாண்டே தேசியக் கொடியை கையில் பிடித்துக்கொண்டிருந்தார்" என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அசோக் சவானும் பாண்டேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து ராகுல் காந்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐந்து மாவட்டங்களில் உள்ள பதினைந்து சட்டமன்ற மற்றும் ஆறு நாடாளுமன்றத் தொகுதிகள் வழியாக 15 நாட்களில் பயணம் செய்து 382 கி.மீ. செல்கிறார். இந்த யாத்திரை நவம்பர் 20 ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்திற்குள் நுழைகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass senior leader krishanakumar died ragulgandhi condoles


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->