நாமெல்லாம் ஒரே கூட்டணிங்க! கண்டித்த காங்கிரஸிடம் கதறிய ஆம் ஆத்மி அமைச்சர்! - Seithipunal
Seithipunal


ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் ஊழல் புகாரில் சிக்கி சிறையில் இருப்பதால் தான், மக்களவை தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது என்று காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், ஆம் ஆத்மியுடன் கூட்டு சேராமல் போட்டியிட்டிருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் தத் குற்றம் சாட்டியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் மூன்று தொகுதிகளிலும், ஆம் ஆத்மி நான்கு தொகுதிகளில் போட்டியிட்டன. இந்தத் தேர்தல் முடிவில் டெல்லியில் 7 தொகுதியிலும் பாஜக தான் வெற்றி பெற்றது.

இது தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் தத் தெரிவித்துள்ளதாவது, "டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த கோரி காங்கிரஸ் தரப்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. 

இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, 18 மாதங்கள் வரை சிபிஐ இந்த வழக்கு குறித்து எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். 

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சத்யேந்தர் ஜெயின் மற்றும் மணிஷ் சிசோடியா ஆகியோர் ஊழல் புகாரில் சிக்கி சிறையில் இருந்ததால் தான் டெல்லியில் காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தது. 

மக்களவை தேர்தலின் போது, டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டு சேராமல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டிருந்தால் கண்டிப்பாக  வெற்றி பெற்றிருக்கும். 

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது ஒரு அமைச்சரின் கடமை. ஆனால், டெல்லியில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சர் ஆதிஷி தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றார்". இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். 

இதற்கிடையே, எதிர்க்கட்சிகளுக்குள் (இண்டி கூட்டணி) பிளவு ஏற்படுவது நல்லதல்ல என்றும், எதிர்க்கட்சியினர் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க போராடி வருவதாகவும் ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் கருத்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Condemn to AAP for Delhi Lok Sabha Election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->